[X] Close

பள்ளிக்கு செல்லும் வழியில் பாலியல் சீண்டல்: போராடும் மாணவிகள்

haryana-school-girls-protest-against-eve-teasing

தினமும் சந்தித்து வரும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக ஹரியானா மாநிலம், ரிவேரி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் உண்ணாவிரத் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளிக்கு செல்லும் வழியில், ஆண்களின் கிண்டலுக்கும், பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவதாகவும், மாணவிகளின் தொலைபேசி எண்களைத் தருமாறு வற்புறுத்துவதாகவும், இதற்கு தீர்வு பெறும் வரை போராடப் போவதாகவும் கொத்தெரா டப்ப டஹெனா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கேட்கப்பட்டபொழுது, போராட்டம் செய்யும் மாணவிகள் தவறானவர்களால் வழிநடத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்.


Advertisement

விவரிக்க முடியாத துன்பங்களை பள்ளி மாணவிகள் எதிர்கொண்டு வருகிறார்கள். புகார் தெரிவித்தால், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மாறாக, புகாரை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்துவதாக போராட்டத்தில் பங்குபெற்றுள்ள மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலின விகித அடிப்படையில் மிகவும் பின்தங்கிய மாநிலமான ஹரியானாவில், இளம் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக போராட்டத்தைத் துவங்கியுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags : haryana girls eveteasing protest reveri

Advertisement

Advertisement
[X] Close