காபூலில் திருமண மண்டபத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. 180-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ர்-இ- துபாய் என்ற திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்துகொண்டிருந்தது. இதற்காக ஏராளமான விருந்தினர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது உடலில் குண்டுகளை அணிந்திருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார். இதில் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
இதையடுத்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 63 பேர் உயிரிழந்துள்ளனர். 180 -க்கும் அதிகமானோர் படுகாயமடைந் துள்ளனர்.
இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று ஆப்கானிஸ்தானின் தலீபான் அமைப்பு மறுத்துள்ளது. அதோடு பொதுமக்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வேறு எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில்தான் தருல் அமான் அரண்மனை உள்ளது. இங்குதான் அந்நாட்டின் சுதந்திர தின விழா நாளை நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி