[X] Close

தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை

chennai-will-get-more-rain-today

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அயனாவரம், ராமாபுரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்திலும் மழை கொட்டியது. இன்று காலையும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.


Advertisement

 இதேபோல, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் சில பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்தது. புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.


Advertisement

Advertisement
[X] Close