இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சி யாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சி யாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த 30 ஆம் தேதியுடன் முடிந்தது. தலைமை பயிற்சியாளர் தேர்வு இன்று நடைபெற்றது.
பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோலி விருப்பம் தெரிவித்திருந்தார்.
மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில், பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் செயல்படுவார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?