ஐஎன்எக்ஸ் ஊடக குழுவில் அந்நிய நேரடி முதலீடு முறைகேடுகளை மறைக்க உதவியதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ஐஎன்எக்ஸ் ஊடகக் குழுமத்தின் முன்னாள் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பிரதிம் முகர்ஜி என்கிற பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம், அவரது செஸ் மேனேஜ்மெண்ட் சர்வீஸஸ் நிறுவனம், அட்வாண்ட்டேஜ் ஸ்ட்ராட்டெஜிக் கன்சல்டிங் நிறுவனம், அதன் இயக்குநர் பத்மா பாஸ்கரராமன் மற்றும் பெயர் தெரியாத நிதித்துறை அதிகாரிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 4 கோடியே 62 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் அந்நிய நேரடி முதலீடு பெற அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியம் கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனமோ 305 கோடி ரூபாயை அந்நிய நேரடி முதலீடாகப் பெற்றதாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், வருமான வரித்துறை எழுதிய கடிதத்திற்கு, விசாரணை நடைபெறுவதாக அந்நிய முதலீடு வளர்ச்சி வாரியம் பதில் அளித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.
அப்போதைய நிதி அமைச்சரான சிதம்பரத்தின் மகன் என்ற செல்வாக்கை பயன்படுத்தி இந்தப் பிரச்னையை தீர்க்க கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எக்ஸ் நிறுவனம் அணுகியதாக சிபிஐ கூறியுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் செல்வாக்கால், நிதித்துறை அதிகாரிகள் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் விட்டதோடு, அவர்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு சலுகைகளை அளித்ததாகவும் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!