அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் சுற்றறிக்கை அனுப்பி, இந்து மத உணர்வுகளை காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் பள்ளிக்கல்வி துறைக்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், “தமிழ்நாட்டிலுள்ள ஒருசில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான நிறங்களில் கையில் கயிறுகள் கட்டி உள்ளனர். குறிப்பாக மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து அவ்வாறு நடக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி, பள்ளிக் கல்வி துறையின் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அவ்வாறு நடக்கும் பள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் இதுபோன்று நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து, சாதியை குறிக்கும் கயிறுகளை பள்ளிகளில் மாணவர்கள் அணியக்கூடாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார். அதேசமயம் மாணவ, மாணவியர் வண்ணக்கயிறு கட்டவும், நெற்றியில் திலகமிடுவதையும் தடுக்கக்கூடாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தினார்.
இதனிடையே மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறு கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது தனது கவனத்திற்கு வரவில்லை என அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்தார். பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகளே தொடரும் என்றும், மாணவ, மாணவியர் வண்ணக்கயிறு கட்டவும், நெற்றியில் திலகமிடுவதையும் தடுக்கக்கூடாது என கூறினார். சாதி, மத அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதா என அந்தந்த பள்ளிகளே சரி பார்க்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் சுற்றறிக்கை அனுப்பி, இந்து மத உணர்வுகளை காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ பள்ளிகளில் இந்து மத நம்பிக்கை சார்ந்த கயிறு கட்டுவதற்கும், நெற்றியில் திலகமிடுவதற்கும் தடையில்லை. ஆனால் நேற்றைய முன்தினம் அமைச்சர் அவர்களை கலந்து ஆலோசிக்காமல் சுற்றறிக்கை வெளிப்பட்டது என்றும் கூறியுள்ளார். எனவே இந்துமத உணர்வுகள் காயப்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!