Published : 15,Aug 2019 10:59 AM

“எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும்” - ராஜேந்திர பாலாஜி

If-Any-Party-Come-in-Tamil-Nadu--But-ADMK-will-Rule--DMK-will-Live---Minister-Rajendra-Balaji

தமிழகத்தில் எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை அருகே உள்ள திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் பொது விருந்து நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கோயிலுக்கு வந்த பக்தர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “ஸ்டாலின் பஞ்சரான டியூப். தெய்வீகமும், தேசபக்தியும் இருப்பதால் மத்தியில் பிரதமர் மோடியும், தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாமியும் ஆளுகின்றார்கள்” என்று தெரிவித்தார். 

அத்துடன், “எந்த கட்சி வந்தாலும் அதிமுக ஆளும், திமுக வாழும். இந்த இரண்டு கட்சிகளை தவிர வேறு யாரும் தமிழகத்தில் வரமுடியாது. அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டது முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை. அதற்கு கருணாஸின் புகார் காரணம் இல்லை” என்று கூறினார். இதேபோன்று மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டு பக்தர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்