[X] Close

ஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார் 

Facebook-Paid-Contractors-to-Transcribe-Users----Audio-Chats

ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் ஆடியோ செய்திகளை எழுத்து வடிவத்தில் மாற்ற பல ஒப்பந்ததாரர்களை நியமித்திருந்தது தெரியவந்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் முக்கியமான ஒன்று ஃபேஸ்புக். இந்தச் சமூக வலைத்தளத்தில் இந்தியாவில் அதிக பயனாளர்கள் உள்ளனர். இதில் தகவல் மற்றும் செய்தி பரிமாற்றும் மிகவும் எளிதில் நடைபெறுகிறது. இந்தத் தளத்தில் செய்திகளை எளிதில் பதிவிட பயனாளர்கள் ஆடியோவாக செய்திகளை கூறினால் அதை எழுத்துப்பூர்வமாக மாற்றும் வசதி உள்ளது. இந்த வசதியை அதிக பேர் பயன் படுத்திவருகின்றனர். 


Advertisement

இந்நிலையில் இந்த வசதியை செயல்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிலிருந்து ஒப்பந்ததாரர்களை நியமித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிடப்படும் ஆடியோ செய்திகள் பதிவு செய்யப்பட்டு அவை இந்த ஒப்பந்ததாரர்களால் எழுத்தாக மாற்றப்படுகிறது. இது பயனாளர்களின் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்று பலர் கருதுகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close