Published : 12,Aug 2019 04:36 PM

கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Rain-can-fall-Sea-border-areas---Chennai-Met

தமிழகத்தில் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்குப் பருவமழை காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேவாலா ஆகிய பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் 3 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாக கூறியுள்ளது. 

மேலும், தமிழகத்தில் கடலோர மற்றும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்