நெல்லை மாவட்டம் கடையம் அருகே கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க முதியோர்கள் போராடிய விதம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து, திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரம் கிராமத்தில் , விவசாயி சண்முகவேலு இரவு நேரத்தில் தனது வீட்டின் வெளியே நாற்காலியில் அமர்ந்து காற்று வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது கொள்ளையர்கள் இருவர் முகமூடி அணிந்தபடி, ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதில் ஒரு கொள்ளையர், முதியவரான சண்முகத்தின் கழுத்தை துணியால் நெரித்துள்ளார்.
அப்போது கீழே விழுந்த அந்த முதியவர், பின் சுதாரித்துக்கொண்டு திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் போன்று, துள்ளி எழுந்து தாக்குதலில் ஈடுபட்டார். இந்த சத்தம் கேட்டு சண்முகவேலுவின் மனைவி செந்தாமரை வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். கொள்ளையடிக்க வந்தவர்களுடன் கணவர் போராடுவதைக் கண்ட செந்தாமரையும், களத்தில் இறங்கி கையில் கிடைத்த நாற்காலிகளை தூக்கி சரமாரியாக வீசினார். தாக்குதல்களுக்கு இடையே கொள்ளையர் ஒருவர், செந்தாமரை அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.
கொள்ளையடிக்க வந்தவர்களிடம் இருந்து தப்பிக்க போராடியது மட்டுமன்றி, அவர்களை மடக்கிப் பிடிக்கவும் முதியவர்கள் போராடினர். ஒருவழியாக தப்பித்தோம் , பிழைத்தோம், என்றபடி ஓடினர் கொள்ளையர்கள். முதியவர்களின் இந்த போராட்டக்காட்சி, அவர்களின் வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கடையம் காவல்துறையினர், கொள்ளையர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டுதேடி வருகின்றனர். அரிவாள்களை வைத்து மிரட்டிய கொள்ளையர்ளை, துணிச்சலுடன் எதிர்கொண்டு போராடிய வயதான தம்பதியினருக்கு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
Loading More post
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
2024 தேர்தலையொட்டி 8 பேர்கொண்ட அரசியல் விவகாரக்குழு - காங்கிரஸ் தலைமை உத்தரவு
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!