Published : 12,Aug 2019 05:57 AM
’இது சரியா?’ பாக். பெண்ணின் திடீர் கேள்வி, அசத்தலாக பதில் சொன்ன பிரியங்கா!

பாகிஸ்தான் இளம் பெண் ஒருவர் கேட்ட திடீர் கேள்விக்கு நடிகை பிரியங்கா சோப்ரா அசத்தலாக சொன்ன பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்க நடிகர் மற்றும் பாடகர் நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசிக்கிறார். இவர், அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அவரை குற்றம் சாட்டி கேள்வி கேட்டார்.
பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததை வாழ்த்தியும் இந்திய பாதுகாப்பு படைக்கு ஆதரவாகவும் பிரியங்கா பதிவிட்டதை சுட்டிக்காட்டிய அந்தப் பெண், “யுனிசெப், நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அணு ஆயுத போரை ஆதரிக்கலாமா? உங்களையும் உங்கள் படங்களையும் பாகிஸ்தானில் ரசிக்கிறோம். ஆனால், நீங்கள் அணு ஆயுத போருக்கு ஆதரவாகச் செயல்படுகிறீர்கள்? இது சரிதானா. நீங்கள் கபட நாடகம் ஆடுகிறீர்கள்” என்று கோபமாகச் சொன்னார்.
அதற்கு பதிலளித்த பிரியங்கா, “எனக்கு பாகிஸ்தானில் அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். நான் போரை தூண்டக்கூடியவள் இல்லை. ஆனால் எனக்கு தேசபக்தி இருக்கிறது. இதற்காக என்னை நேசித்த, நேசித்துக் கொண்டிருப்பவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன். இதற்காக கூச்சல் போட வேண்டாம். நாம் அன்பு செலுத்தவே இங்கு இருக்கிறோம். உங்களையே வருத்திக்கொள்ள வேண்டாம். இருந்தாலும் உங்கள் உற்சாகத்துக்கும் இப்படியொரு கேள்வியை கேட்டதற்கும் நன்றி” என்று கூறினார்.
Priyanka Chopra gets an audience question calling her hypocritical — here’s her response. #beautyconpic.twitter.com/pS82qX1SQG
— Lindsay Weinberg (@WeinbergLindsay) August 10, 2019