[X] Close

நாளை மறுநாள் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Day-after-tomorrow-chance-for-Heavy-Rain-in-covai-and-nilgiri-district

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மேற்குதொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால், நீலகிரி, கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மலைபாங்கான நீலகிரி மாவட்டத்தில், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.


Advertisement

இந்நிலையில், நாளை மறுநாள் முதல் இரு நாட்களுக்கு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து்ளது. இதேபோல் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலம் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close