[X] Close

துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை: பாஜக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் புகார்

Former-BJP-MLA-booked-for-raping--threatening-daughter-in-law

துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

டெல்லியின் நாங்லோய் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வான மனோஜ் ஷோகீன், தனது மருமகளை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தாக புகார் எழுந்தது. மருமகள், தனது புகாரில், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட கணவர் உள்ளிட்ட குடும்பத்தாருடன் ஓட்டலுக்குச் சென்றதாக குறிப்பிட்டுள் ளார்.


Advertisement

கொண்டாட்டங்களுக்குப் பிறகு கணவர், நண்பர்களுடன் சென்ற நிலையில், மது போதையில் இருந்த மாமனார் துப்பாக்கி முனையில் மிரட்டி தன்னிடம் தகாத முறையில் நடந்த‌ கொண்டதாக புகாரில் கூறியுள்ளார். மறுத்தால் தனது சகோதரரை கொன்றுவிடுவதாகக் கூறி மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மனோஜ் ஷோகீன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close