[X] Close

மணிரத்னம் படத்தில் பாலாஜி சக்திவேல்!

Balaji-Sakthivel-onboard-for-Mani-Ratnam-s--Vaanam-Kottattum-

மணிரத்னம் தயாரிக்கும் ’வானம் கொட்டட்டும்’ படத்தில் நடிக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.


Advertisement

விக்ரம் பிரபு, மடோனா, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உட்பட பலர் நடிக்கும் படம், ’வானம் கொட்டட்டும்’. சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  மணிரத்னம் கதை எழுதி தயாரிக்கும் இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.


Advertisement

இந்தப் படத்தில், இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களைத் தொடர்ந்து ரா ரா ராஜசேகர் படத்தை இயக்கியுள்ளார் பாலாஜி சக்திவேல். இந்தப் படம் வெளியாகவில் லை. 

இந்நிலையில் இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’அசுரன்’ படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் பாலாஜி சக்திவேல். அந்தப் படம் வெளிவரும் முன்பே, மணிரத்னத்தின் படத்தில் அவர் நடிக்கிறார். 
 


Advertisement

Advertisement
[X] Close