கேரளா, கர்நாடகாவில் மழை, வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் மட்டும் 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் முன்பதிவு தொகையை அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை பெறலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல், கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், தென் கர்நாடகத்தில் உள் மாவட்டங்களான சிவமொக்கா, கார்வார், மங்களூரு, உடுப்பி, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், மகாராஷ்டிராவின் பல இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கேரளா, கர்நாடகா, மகாரஷ்டிராவில் இடைவிடாது கொட்டும் மழை, வெள்ளத்தால் சுமார் 2 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.
நேற்று மட்டும் கேரளாவில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கேரளாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கர்நாடகாவில் நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், கர்நாடகாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவின் கொச்சி விமான நிலையம் நாளை வரை மூடப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!