Published : 09,Aug 2019 06:58 AM

ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு, 16 பேர் படுகாயம்!

4-killed--16-injured-after-bus-plunges-into-Trishuli-river-in-Nepal

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 பேரை காணவில்லை.

நேபாளத்தின் சர்லாஹி மாவட்டத்தில் இருந்து காத்மண்டு-க்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. 45-க்கும் அதிகமானோர் பேருந்தில் இருந்தனர். இன்று அதிகாலை தடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆற்றுக்குள் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். 23 பேரை காணவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்