ஐபிஎல் கிரிக்கெட்டில் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. முதல் தகுதிச்சுற்றில் மும்பை அணி, இரண்டாவது இடம் பிடித்த புனே அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இதில் மும்பை அணி எப்படி இருக்கிறது?
ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி, நடப்புத் தொடரை தோல்வியுடன் தொடங்கிய போதிலும், லீக் சுற்றை வெற்றிடன் நிறைவு செய்து புள்ளிகள் பட்டிலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 14 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்றாலும் புனே அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் மும்பை தோல்வியையே சந்தித்துள்ளதால் உள்ளூர பயம்.
இருந்தாலும் முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இருக்கிறது மும்பை.
முன்னாள் சாம்பியனான மும்பை, வெற்றிக்காக குறிப்பிட்ட வீரர்களை மட்டும் சார்ந்து இருக்கவில்லை என்பது அவர்களின் பலம்.
பேட்டிங்கில் கேப்டன் ரோகித் ஷர்மா, சிம்மன்ஸ், ராணா, பார்த்திவ் படேல் ஆகியோருடன், ஆல்ரவுண்டர்கள் பொல்லார்டும், ஹர்திக் பாண்ட்யாவும் நெருக்கடியான நேரங்களில் கை கொடுக்கின்றனர்.
பந்துவீச்சில் மிச்செல் மெக்கிளேனகன், பும்ரா, மலிங்கா, ஹர்பஜன் சிங் ஆகிய அனுபவ வீரர்கள் மும்பை அணிக்கு பலம் சேர்கின்றனர் என்பதால் தெம்பாக இருக்கிறது அந்த அணி.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix