[X] Close

கர்நாடகாவில் கனமழைக்கு 9 பேர் பலி

9-people-have-died-in--flood-affected-Karnataka

கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட கர்நாடகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள், தென் கர்நாடகத்தில் உள் மாவட்டங்களான சிவமொக்கா, கார்வார், மங்களூரு, உடுப்பி, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அந்த பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மழை வெள்ளப்பாதிப்பு நிவாரண பணிகளுக்கு ரூ.5,000 கோடி தேவை என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மழை வெள்ளத்துக்கு அந்த மாநிலத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 16875 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 3010 விலங்குகளும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close