இந்தி, தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் எடுப்பவர்கள் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த முன்வரவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் 370வது சட்டப்பிரிவை நீக்கியது மூலம் தமது அரசு சரித்திரம் படைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.மேலும், காஷ்மீரும் லடாக்கும் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்வதற்கான அம்சங்களை கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தி, தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் எடுப்பவர்கள் காஷ்மீரில் படபிடிப்பு நடத்த முன்வரவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் நோக்கம் நிறைவேற காஷ்மீர் மக்கள் ஒத்துழைக்க கூடாது என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். தற்போதைய புதிய நடைமுறை மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் முற்றிலும் ஒழிக்க முடியும் என தான் உறுதியாக நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
லடாக் பகுதி தொடர்ந்து யூனியன் பிரதேசமாகவே நீடிக்கும் என்றும் அதே சமயம் காஷ்மீருக்கான யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானதே என்றும் பிரதமர் குறிப்பிட்டார். காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்