“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு

“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு
“கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுத் தாருங்கள்” - காஷ்மீர் விவாதத்தில் ரவீந்திரநாத் பேச்சு

காஷ்மீர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த இந்தியாவே வேண்டும் என ஜெயலலிதா அன்று பேசியது இன்று நிகழ்ந்துள்ளதாக அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய ரவீந்திரநாத் குமார் எம்பி, “1984ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாநிலங்களவையில் பேசிய போது, ‘ஜம்மு-காஷ்மீரை சில பிரிவினைவாத சக்திகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒடுக்கப்படுகின்ற சூழல் நிலவி வருகிறது. 

அதற்கு மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கவர்னர் ஆட்சியை ஆளுநர் ஆட்சி அங்கு அமல் படுத்த முடியுமா? ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்க பட வேண்டும்’ என பேசினார். 

இன்று நம் பாரத பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஜெயலலிதாவின் கோர்க்கைய நிறைவேற்றியதற்கு முழுமையான நன்றியை அ.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். அதற்கு மேலாக இன்று இருக்க கூடிய சூழ்நிலையில் இந்த மசோதா மூலமாக ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரமாக கதவை திறந்து விட்டீர்கள். அவர்கள் இந்திய மண்ணில் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பார்கள் என்றே நான் முழுமையாக நம்புகிறேன். 

சில அரசியல் ஆதாயத்திற்காக 1974-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கச்சத்தீவை தமிழகத்தில் இருந்து பிரித்து இலங்கைக்கு கொடுத்துவிட்டது. அவர்கள் அரசியல் லாபத்திற்காக அங்கே ஜம்மு-காஷ்மீரின் உரிமையை இந்தியாவில் இருந்து பிரித்தது போல இங்கு தெற்கே தமிழ்நாட்டிலிருந்து பிரித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டின் உரிமையான கட்சத்தீவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு பெற்றுத்தர வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கிறேன். இந்த பிரதமர் புதிய இந்தியாவின் இந்த ஜம்மு-காஷ்மீரின் மசோதா ஒரு மைல்கல்லாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்” என்றார்.


 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com