காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
370 பிரிவின் கீழ் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மறுசீரமைப்பு மசோதாவுக்கு அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவும் காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி மற்றும் சுப.வீரபாண்டியன், ஹைதர் அலி உள்ளிட்ட ஏரளமானோர் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி செல்லுகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!