[X] Close

காஷ்மீர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் முக்கிய முடிவை அறிவிக்கிறார் அமித் ஷா?

important-announcement-in-Kashmir-issue-is-expected

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப் பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா ,மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியேற அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


Advertisement

 இந்நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்றுகாலை ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த முடிவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  11 மணி அளவில் மக்களவையிலும் அதன் பின்னர் 12 மணிக்கு மாநிலங் களவையிலும் அவர் அறிவிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது


Advertisement

Advertisement

Advertisement
[X] Close