Published : 05,Aug 2019 04:09 AM

காஷ்மீர் விவகாரம் - காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

Congress-MPs-Adhir-Ranjan-Chowdhury--K-Suresh-and-Manish-Tewari-have-given-Adjournment-Motion-notice-in-Lok-Sabha--over-Kashmir-issue

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது.

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அங்கு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருவதால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுமா? அல்லது மாநிலம் மூன்றாக பிரிக்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வருகிறது. 

இதனால் காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ப.சிதம்பரம், சசிதரூர் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம்  தொடங்கி உள்ளது. இதில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மணீஷ் திவாரி, சுரேஷ் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். மேலும், காங்கிரஸ் எம்பிக்கள் குலாம் நபி ஆசாத், அம்பிகா சோனி, புபனேஷ்வர் கலிட்டா ஆகியோர் ராஜ்ய சாபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்