Published : 15,May 2017 06:05 AM

மும்பை கொடூர கொலையில் கிடைத்தது தலை!

Navi-Mumbai-Crime

மும்பையில் காதல் மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி வீசிய வழக்கில் இளம்பெண்ணின் தலையை போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.

நவி மும்பையில் சில நாட்களுக்கு முன் தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடலை போலீசார் கைப்பற்றினர். அந்தப் பெண்ணின் தோள் பட்டையில் குத்தப்பட்டிருந்த கணபதி மற்றும் ஓம் என்ற டாட்டூவை வைத்து, அவர் வொர்லியை சேர்ந்த பிரியங்கா (24) என்பது தெரியவந்தது.

உடல் கிடந்த 5 நாட்களுக்கு முன்பு தான் பிரியங்கா, காதலர் சித்தேஷ் குரவ் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் இன்டர்வியூ சென்ற அவர் வீடு திரும்பவில்லை என சித்தேஷ் குரவ், வொர்லி போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார், பிரியங்காவின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கால்களை தேடிவந்தனர். பிறகுதான் சித்தேஷ், அவர் அம்மா, அம்மா, நண்பர் ஆகியோர் சேர்ந்து பிரியங்காவை கொன்றது தெரியவந்தது.

பிரியங்காவும் சித்தேஷும் காதலித்து வந்தனர். உடனே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினாராம் பிரியங்கா. திருமணம் நடந்தது. பின்னர் தினமும் தகராறு. இந்தச் சண்டையில் மாமியாரும் சேர்ந்துகொண்டார். பிரியங்காவின் நடத்தையில் சித்தேஷூக்கு சந்தேகம் வர, கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு அவரின் அம்மாவும் உடந்தை. நண்பர் துர்கேஷிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். கொலைக்கு அட்வான்ஸாக ரூ.40 ஆயிரம் கொடுத்தார் சித்தேஷ். பிறகு துர்கேஷ், தலையணையால் அமுக்கி பிரியங்காவை கொன்றுவிட்டு, பாத்ரூமில் வைத்து தலை, உடல், கால்கள் என துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார். பிறகு ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு பையில் போட்டு, ஒவ்வொரு இடத்தில் வீசியிருக்கிறார். கால்களை, கோனி என்ற கிராமத்தில் வைத்து எரித்திருக்கிறார். போலீசார் உடல் பாகத்தை நேற்று முன் தினம் கைப்பற்றினர். தலையை தேடி வந்தனர்.

இந்நிலையில் தானே மாவட்டம் சாகாப்பூர்- நாசிக் சாலையில் தலையை கண்டுபிடித்தனர். பிளாஸ்டிக் பையில் மூடி வைக்கப்பட்டிருந்த அது ஒரு மரத்தின் அடியில் வீசப்பட்டிருந்தது. அதைக் கைப்பற்றிய போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்