[X] Close

வருவாரா, மாட்டாரா?: ரஜினி மீண்டும் கிர்ர்ர்!

rajinis-political-entry

அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் குழப்பமாகவே மீண்டும் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து இன்று புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக ரசிகர்களிடம் அவர் பேசும்போது அரசியலுக்கு வருவதைப் பற்றி மீண்டும் குழப்பமாகவே பேசினார். இதனால் அவர் வருவாரா மாட்டாரா என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

அவர் பேசும்போது கூறியதாவது:


Advertisement

சில ரசிகர்கள் எனக்கு கடிதம் எழுதறாங்க. நாம எப்ப முன்னேறுறது? நமக்கு முன்னால பிறந்தவங்கள்லாம் கவுன்சிலர், மினிஸ்டர்னு போறாங்களேன்னு பேட்டி கொடுக்கிறாங்க. ஆசைப்படறாங்க. அவங்க ஆசை தப்பில்லை. அதை வச்சு பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கிறதை பார்த்தா, வருத்தப்படறதா, கோபப்படறதா, சிரிக்கிறதான்னு தெரியலை. நான் அப்பவும் சொல்றேன், இப்பவும் சொல்றேன். அந்த ஆண்டவன் கையில்தான் என் வாழ்க்கை இருக்கு.

அவன் கையில நான் ஒரு கருவி. அவன், நடிகனா என்னை பயன்படுத்தறான். நான் நடிச்சுட்டிருக்கேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்தறானோ, அதுக்கு நியாயமா, உண்மையா இருப்பேன். இப்ப மக்களை மகிழ்விக்கணும். பண விஷயங்கள் அப்புறம்தான். அதே போல, என்ன பொறுப்பை கொடுத்தாலும் நியாயமா, சத்தியமா இருப்பேன். அது என்னன்னு எனக்கு தெரியாது. அது கடவுள் கையிலதான் இருக்கு.

அரசியல் ஆசை இருக்கிற என் ரசிகர்களுக்கு இப்பவே சொல்லிக்கிறேன். நான் அரசியலுக்கு வரலைன்னு சொன்னா ஏமாந்திடுவீங்க. அப்படி அரசியலுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த மாதிரி ஆட்களை கிட்ட கூட சேர்க்க மாட்டேன். நுழைய கூட விடமாட்டேன். இப்பவே ஒதுங்கிடுங்க. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.


Advertisement
Related Tags : rajinikanth

Advertisement

Advertisement
[X] Close