Published : 04,Aug 2019 05:21 AM
மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடியின் தம்பி தரிசனம்

பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடி. இவர், இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருடன் மக்களவை முன்னாள் துணை சபாநாயகரும் அதிமுக தலைவருமான தம்பிதுரையும் வந்திருந்தார்.
(நடுவில் இருப்பர் பங்கஜ் மோடி)
பங்கஜ் மோடி, கடந்த மக்களவை தேர்தலின் போது ராமேஸ்வரம் வந்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.