[X] Close

1990களின் நிலைமையை காஷ்மீரில் கொண்டுவர மத்திய அரசு நினைக்கிறது - காங். குற்றச்சாட்டு

Centre-spreading-fear--panic-in-Kashmir--Congress

காஷ்மீரில் மத்திய அரசு பயம், பீதியை கிளப்பி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.


Advertisement

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக 25 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கூடும் என்பதால், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டதா என்று அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இதற்கிடையில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு கருதியே காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டதாகவும், அரசமைப்பு சட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசிடம் இருந்து தகவல்கள் ஏதும் தனக்கு வரவில்லை என்றும் ‌ஆளுநர் கூறினார்‌.

                


Advertisement

இந்நிலையில், காஷ்மீரில் மத்திய அரசு பயம், பீதியை கிளப்பி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அமர்நாத் யாத்திரையை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிப்பதாவும், சுற்றுலாவை நம்பியுள்ளவர்களின் வாழ்க்கையை அது பாதிக்கும் என்று சாடினார். 30 வருடங்களுக்கு முன்பு 1990களில் இருந்தது போன்ற சூழலை பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தனர்.


Advertisement

Advertisement
[X] Close