Published : 03,Aug 2019 02:30 PM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி முதலில் பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் 2 டி-20 போட்டிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது. உலகக் கோப்பைக்குப் பிறகு விராத் கோலி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணி விவரம்:
ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், குர்ணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், கலில் அகமது, சைனி