அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவுள்ளனர் என்று உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை முடித்த பக்தர்கள் காஷ்மீரை விட்டு உடனே வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவுறுத்தலை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே அமர்நாத் யாத்திரை மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கூடுதல் படைவீரர்கள் கஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டத்தையும் கவனத்தில் கொண்டே காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன் தீவிரவாதத் தாக்குதல் குறித்து உளவுத்துறை எச்சரித்திருப்பதால் மேலும் பாதுகாப்பு அதிகரிப்பது மற்றும் காஷ்மீர் யாத்ரீகர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்ப அறிவுரை வழங்கியுள்ளது ஆளுனர் ஆட்சியின் கீழுள்ள ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகம்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix