[X] Close

சமரசம் பேச வந்த காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்

husband-killed-his-wife-in-tirupur

திருப்பூரில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டி.எம்.எஸ் நகரைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ்வது குறித்து கலந்து பேச பிரியாவை தனது தாயார் வீட்டிற்கு ரமேஷ் அழைத்து வந்துள்ளார். 


Advertisement

அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டிலிருந்த கத்தியால் பிரியாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், ரமேஷை தடுத்து நிறுத்திவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியாவை மீட்டு தங்கள் வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ரமேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close