Published : 02,Aug 2019 02:02 AM

“தங்கள் குடும்பத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது” - கார்த்தி சிதம்பரம்

karthi-chithambaram-condemned-to-central-government

தங்கள் குடும்பத்திற்கு எதிராக பழிவாங்கும் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டை காலி செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை ஜப்தி நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் இதை எதிர்த்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான நடுவர் ஆணையத்தில் அவர் முறையிட்டுள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி முடக்கியது. இதில் டெல்லியிலுள்ள கார்த்தி சிதம‌பரத்தின் வீடும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என தனது அமைப்புகளை பயன்படுத்தி மத்திய அரசு தங்கள் குடும்பத்தை பழிவாங்கி வருவதாக கா‌ர்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகள் எதுவும் ச‌ட்டப்படி சரியானதல்ல என்றும் கார்த்தி சிதம்பரம் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்