Published : 01,Aug 2019 10:00 AM

ஆஷஸ் தொடர் : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்

England-vs-Australia--1st-Test----Australia-opt-to-bat

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. அந்த அணியில், கீப்பர் டிம் பெயின் கேப்டனாக விளையாடுகிறார். அவரை தவித்து, டேவிட் வார்னர், கேம்ரோன் பேன்கிரஃப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ட்ரெவிஸ் ஹெட், மேத்தீவ் வாட், ஜேம்ஸ் பட்டின்சன், பட் கம்மிங்ஸ், பீட்டர் சிடில், நாதன் லையன் ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட், ரோரி பர்ன்ஸ், ஜாசன் ராய், ஜோ டென்லி, ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேரிஸ்டோவ், மொயின் அலி, கிரிஸ் வோக்ஸ், ஸ்டுவார்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நூறு ஆண்டுகளுக்கு மேலான கவுரவப் போட்டியாக ஆஷஸ் தொடர் இருப்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்