Published : 31,Jul 2019 01:30 PM

டெல்லி காங்கிரஸ் தலைவராகிறார் சித்து ?

Navjot-Singh-Sidhu-to-be-appointed-as-Delhi-Congress-chief--say-sources

டெல்லியின் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சித்து நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சராக இருந்தார். இவருக்கும் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் கடும் மோதல் நிலவி வந்தது. இதனால் அவர் வகித்து வந்த இலாகா பறிக்கப்பட்டு, வேறு இலாகா கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியை சந்தித்து புகார் அளித்தார் சித்து. பின்னர் மக்களவைத் தேர்தலில் பரப்புரைகளில் ஈடுபட்டார். அப்போது, ராகுல் காந்தி அமேதியில் தோற்றால், நான் அரசியலைவிட்டே விலகுவேன் என்று கூறியிருந்தார். 

தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் பிரச்னை இருந்து வந்த நிலையில், அமைச்சர் பதவியை சித்து ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்தது குறித்து ஜூன் 10ஆம் தேதி ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தை ட்விட் டரில் சித்து வெளியிட்டிருந்தார். அவரது ராஜினாமாவை முதலமைச்சரும் ஏற்றார். இந்நிலையில் டெல்லியின் காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சித்துவை இழக்க விரும்பாத காங்கிரஸ், அவரது சேவை கட்சிக்கு தேவை என்ற நோக்கில் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்