Published : 14,May 2017 07:38 AM

திமுகவின் தரம் தாழ்ந்த அரசியல்: வெங்கய்ய நாயுடு சாடல்

The-DMK-s-poor-quality-politics-venkaia-naidu

பாரதிய ஜனதாவின் கைப்பாவையாக அதிமுக அரசு இருப்பதாக திமுக கூறுவது தரம் தாழ்ந்த அரசியல் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

சென்னை வந்துள்ள அவர் இதுகுறித்துப் பேசுகையில், காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமு‌க, காங்கிரஸின் கைப்பாவையாக இருந்ததா? உள்ளாட்சி தேர்தலுக்கு பாரதிய ஜனதா தயாராக இருக்கிறது. தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தவுள்ளோம். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பழனிசாமியை சந்திக்க வரவில்லை. இனி மாநிலங்களுக்கே சென்று பணியாற்ற உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்