நாட்டை ஆளும் பொறுப்பில் பல காலம் இருந்த கட்சியான காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் பொறுப்பை பிரியங்கா ஏற்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் படுதோல்வி, நாட்டின் அதிக மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பை இழந்து நிற்கும் சூழல் போன்றவை காங்கிரஸ் கட்சியை நிலைகுலையச் செய்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பொறுப்பைத் துறந்தார் ராகுல் காந்தி. தொண்டர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியும் பொறுப்பில் நீடிக்க மறுத்துவிட்ட நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
நேரு குடும்பத்தினர் அல்லாத இளைய தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக ஜோதிராதித்ய சிந்தியா, சசி தரூர், சச்சின் பைலட் போன்றவர்களின் பெயர்களும் பேசப்பட்டன. இந்நிலையில் சசி தரூர், காங்கிரஸ் கட்சி தற்போது இருக்கும் நிலையில் அதனை வழிநடத்தத் தகுதி வாய்ந்த தலைவர் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்காவே என்ற கருத்தினை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதலமைச்சருமான அமரிந்தர் சிங்கும், பிரியங்கா தலைமைப் பொறுப்பை ஏற்றால் அதனை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு தேவையான அத்தனைத் தகுதிகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை வழிமொழிகிறார் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ்.
கட்சித் தொண்டர்களோடு பழகும் தன்மை, மக்களை வசீகரிக்கும் ஆற்றல், எதிர்க்கட்சியினரை அனைத்து வகையிலும் எதிர்கொள்ளும் துணிவு போன்ற பல காரணிகளை அடுக்கி பிரியங்காவே அடுத்த தலைவராக பொறுப்பேற்க சரியான நபர் என்கின்றனர் அக்கட்சியினர்.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டியே இது குறித்து முடிவு செய்யும் என்றும் கூறுகின்றனர். காலம் காலமாக மக்கள் செல்வாக்கைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் இருந்த காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை பிரியங்கா ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?