ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதை அரசு பரிசோதித்து பார்க்க தவறியதால் வரி வருவாய் குறைந்ததாக ஜிஎஸ்டி தொடர்பான அரசுத் தலைமை தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிகள் குறித்து அரசுத் தலைமை தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷியின் முதல் அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பின் முக்கிய அம்சமான ரசீது சரிபார்க்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அமல்படுத்தப்படவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான படிவங்கள் தாக்கல் செய்யப்படுவதும் முழுமையாக இல்லை என்றும் மாதந்தோறும் குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மாநில அரசுகளுடன் வருவாய் பகிர்விற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அரசு பின்பற்ற தவறிவிட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது 2017-18ஆம் ஆண்டிற்கான ஐ-ஜிஎஸ்டி தொகையின் பகிர்வு நிதி ஆணையத்தின் விதிகளின்படி பகிரப்பட்டுள்ளது. இது ஐ-ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறும் விதமாக அமைந்துள்ளது. ஆகவே மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் ஜிஎஸ்டி வரி அறிமுகபடுத்தப்பட்டதற்கு பிறகு மறைமுக வரிகள் வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளதாக தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது 2016-17ஆம் ஆண்டு 21.33% ஆக இருந்த மறைமுக வரிகளின் வளர்ச்சி 2017-18ஆம் ஆண்டு 5.8%ஆக குறைந்துள்ளது. அதேசமயம் இந்தக் காலாண்டில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் வரும் வருவாயும் 10% குறைந்தது. இதற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி முறையை அமல்படுத்துவதற்கு முன்பு சரியாக சோதனை செய்யாததே காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்