Published : 30,Jul 2019 10:06 AM
"ஓபிஎஸ் மகனுக்கு டங் ஸ்லிப்பாகிவிட்டது" - அன்வர் ராஜா

முத்தலாக் மசோதா குறித்த அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரின் பேச்சு டங் ஸ்லிப் போன்றதுதான் என்று முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறியுள்ளார்.
முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மக்களவையில் ஆதரவு தெரிவித்திருந்தார். இது குறித்து புதிய தலைமுறைக்கு அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா பேசிய போது, “முத்தலாக் மசோதா குறித்த அதிமுகவின் நிலைப்பாடு ரவீந்திரநாத் குமாருக்கு சரியாக போய்ச் சேரவில்லை. சரியாக தகவல் போய்ச் சேராததால் ரவீந்திரநாத் முதலில் ஆதரித்துள்ளார்.
முதலில் தவறாக பேசினாலும் இப்போது கேட்டால் சரியாக பேசுவார் ரவீந்திரநாத். மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றுவதால் அது குறித்து சரியாக படிக்கமுடியவில்லை. முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதே அதிமுகவின் நிலைப்பாடு” என்று கூறினார்.
முத்தலாக் தடுப்பு மசோதாவிற்கு மக்களவையில் ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர்.