கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், காயத்ரி ரகுராம் குறிப்பிட்ட சமூகத்தை இழிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த ஜூன் 23ம் தேதி முதல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வனிதா மீது குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து முடிந்தது. அதே போல், மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன் அழகிப் போட்டி நடத்துவதாக கூறி பண மோசடி செய்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இந்தவாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவரான சரவணன், தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்ததாக சர்ச்சைக்குரிய கருத்தை முன் வைத்தார். இதற்கு கமல்ஹாசன் எந்தவிதமான ஆட்சேபமும் தெரிவிக்காத நிலையில், பார்வையாளர்களும் சரவணனின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் இந்தச் சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் திங்களன்று ஒளிப்பரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில், தன்னை போல யாரும் தவறு செய்யாக்கூடாது எனவும், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் சரவணன் கூறியுள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்