[X] Close

மேட்டூரில் கனமழை : மக்கள் மகிழ்ச்சி

Heavy-Rain-Falling-in-Mettur---Public-Happy

மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் திடீரென்று மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பூமி குளிர்ச்சி அடைந்தது. 

இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கனமழையின் காரணமாக மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரும் சற்று உயர்ந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close