[X] Close

“பொய்யான வெற்றியை திமுக பெற்றது ”- முதல்வர் பழனிசாமி

dmk-got-fake-victory-cm-palanisamy

ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.


Advertisement

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றியை திமுக பெற்றது.


Advertisement

அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். அவர் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்

தடையில்லா மின்சாரம் தரப்படுவதால் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 16,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close