Published : 13,May 2017 03:31 PM
இந்தோனேசிய கடற்கரையில் கடல் ராட்சசன்

இந்தோனேசிய கடற்கரையில் மர்மமான, பிரம்மாண்டமான கடல் உயிரினத்தின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்தோனேசியாவின் ஹூலூ கடற்கரையில் ஒதுங்கியுள்ள இந்த சடலம் 15 மீட்டர் நீலத்துடன் சுமார் 35 டன் எடை கொண்டதாக உள்ளது. ஆனால் இது எந்தவகை உயிரினம் என்பது தெளிவாக தெரியவில்லை என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
உயிரினத்தின் சடலம் கிடக்கும் கடற்கரையில் சில மீட்டர் பரப்பளவில் கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் கடற்கரைக்கு சென்ற ஆராய்ச்சியாளர்கள், சடலத்தை ஆய்வு செய்தனர். இது பெரிய கணவாய் மீனாகவோ அல்லது பெரிய பற்களை கொண்ட திமிங்கலமாகவோ இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். எந்த உயிரினமாக இருந்தாலும், பார்ப்பதற்கு பிரமாண்டமாக, ராட்சசன் போல தெரிகிறது.