Published : 23,Jul 2019 07:26 AM
கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு... நாளைக்கு ஒத்திவைப்பு

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் குமாரசாமி, தன் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்தார். ஆனால் தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று நாட்கள் நடந்த நிலையில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
இதனிடையே கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடகா சட்டப்பேரவையில் அதிகப்பட்சமாக இன்று வாக்கெடுப்பு நடக்கலாம் என சபாநாயகர் தெரிவித்தார். இதனையடுத்து சபாநாயகரின் பதிலை ஏற்ற உச்சநீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.