[X] Close

“ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் மக்களின் உரிமையை பறிக்க அரசு முயற்சி”- சோனியா காந்தி

Sonia-Gandhi-opposed-for-amend-RTI

ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை அரசு பறிக்க முயற்சி செய்வதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ஆர்டிஐ திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. இதனையடுத்து இந்த சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படவுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசிற்கு போதிய பலம் இல்லாததால் அங்கு இந்த மசோதா நிறைவேறுவது சற்று கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

இந்நிலையில் ஆர்டிஐ திருத்த மசோதா மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை அரசு பறிக்க முயற்சி செய்வதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “ தற்போதைய ஆர்டிஐ-யை மத்திய அரசு இடைஞ்சலாக பார்க்கிறது. எனவே தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கு நிகராக உள்ள மத்திய தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை பறிக்க அரசு முயற்சிகிறது. இந்த நோக்கத்திற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையையும் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் அது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களின் உரிமையை பறிக்கும் விதமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close