[X] Close

வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் பொல்லார்ட், சுனில் நரேன்!

Narine--Pollard-named-in-West-Indies-squad-for-India-T20Is

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி-20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் பொல்லார்ட், சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20, மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் இரண்டு டி-20 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் ஆகஸ்ட் 3, மற்றும் 4 ஆம் தேதிகளில் நடக்கிறது. கடைசி டி- 20 போட்டியில் இருந்து மற்ற ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 


Advertisement

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி-20 தொடருக்கான, 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த சில வருடங்களாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல்  இருந்த பொல்லார்ட், சுனில் நரேன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஆண்ட்ரு ரஸலும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் காயமடைந்துள்ளதால், உடல் தகுதி தேர்வுக்கு பின் அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல் இடம்பெறவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் தேர்வு குழுவின் இடைக்காலத் தலைவர் ராபர்ட் ஹெய்ன்ஸ் கூறும்போது, ‘’டி20 உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்துள்ளோம். டி-20 தொடர்களில் பொல்லார்ட்டும் நரேனும் சிறப்பாக விளையாடி இருப்பதால், அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இது சிறப்பான கலவையை கொண்ட அணி என்று நினைக்கிறோம்’’ என்றார். 

அணி விவரம்:
பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்ட், ரோவ்மன் பாவெல், கீமோ பால், சுனில் நரேன், காட்ரல், ஓஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஆண்ட்ரே ரஸல், காரி பியர்ஸ்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close