Published : 22,Jul 2019 04:38 PM
மும்பை தொலைபேசி இயக்கக கட்டடத்தில் தீவிபத்து... 60-க்கும் அதிகமானோர் மீட்பு

மும்பையில் உள்ள தொலைபேசி இயக்கக கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 60-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
பாந்த்ரா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள எம்டிஎன்எல் தொலைபேசி இயக்கக கட்டடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அறையில் இருந்தவர்கள் தங்களை காத்துக்கொள்ள மொட்டைமாடியில் தஞ்சமடைந்தனர். கட்டடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகின. இதையடுத்து அங்கு வந்த 14 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டன. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட தீயை அணைக்கும் ரோபோவும் இந்தப் பணியில் பயன்படுத்தப்பட்டது.
கட்டடத்தில் சிக்கியிருந்த 60-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணியில் ஈடுபட்ட படுகாயமடைந்த தீயணைப்புப் படை வீரர் ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.