உத்திரகாண்டின் 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கருக்கலைப்பு மற்றும் சிசுக்கொலையை வெட்டவெளிச்சமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில் உத்திரகாண்டின் 132 கிராமங்களில் கடந்த 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியான தகவலின்படி 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 216 குழந்தைகள் பிறந்ததாகவும் அதில் ஒன்றுகூட பெண் குழந்தை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் ஆஷிஷ், ''பெண் குழந்தை பிறக்காத கிராமத்தை கணக்கெடுத்து கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளோம். விரைவில் ஆய்வு செய்து உரிய காரணம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் கல்பனா தாகூர், ''மூன்று மாதங்களாக 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தைக் கூட பிறக்கவில்லை என்பது எதார்த்தமானது அல்ல. இந்தப்பகுதியில் கருக்கலைப்பு அல்லது பெண் சிசுக்கொலை நடந்துவருவதை இந்த புள்ளிவிவரம் வெட்டவெளிச்சமாக காட்டுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!