தந்தையை தவறாக சித்தரிக்க வேண்டாம்... நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ்

தந்தையை தவறாக சித்தரிக்க வேண்டாம்... நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ்
தந்தையை தவறாக சித்தரிக்க வேண்டாம்... நடிகர் ரஜினிக்கு நோட்டீஸ்

தனது தந்தையை கடத்தல்காரராக சித்திரிக்க வேண்டாம் எனக் கூறி ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனான சுந்தர் ஷேகர் என்பவர் நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள நோட்டீசில், பா இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தில் ஹாஜி மஸ்தானை கடத்தல்காரராகவும், நிழலுலக தாதாவாகவும் சித்திரித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியானதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன், பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மும்பையை கலக்கிய ஹாஜி மஸ்தான் மிர்சாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com