இரண்டாவது கணவருடன் இருந்த கர்ப்பிணி பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணி பகுதியில் அம்சத் என்ற கர்ப்பிணி பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் கதவை உடைத்த நேற்று உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதை தடுக்க முயன்ற மதனுக்கும் வெட்டு விழுந்துள்ளது.
இதில் அம்சத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மதன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அம்சத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலையை முதல் கணவர் வடிவேலு தான் ஆத்திரத்தில் செய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி, அவரை தேடி வருகின்றனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!