’கேப்டன் பதவிக்கு மனரீதியாக தயாராகிவிட்டேன்’ என்று ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக, சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடருக்கு மட்டும் கேப்டனாக இருந்த அவர், இப்போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’’கேப்டன் பதவிக்கு என் பெயரை அறிவித்ததும் வியப்பு அடையவில்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறேன். அடுத்து கேப்டன் தானே? இந்தப் பதவிக்கு இப்போது மன ரீதியாக தயாராகிவிட்டேன். நாட்டுக்காக இதுபோன்ற பதவிகள் வரும்போது, எப்போதும் தயாராக இருக்க வேண்டும். என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை செய்வேன். உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டோம்.
மனரீதியாக இன்னும் பலமாகவும் சிறந்த பயிற்சியுடன் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். எங்களிடம் திறமை இருக்கிறது. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும். தேசிய அணிக்கு விளையாடும்போது வீரர்கள் பிட்னஸ் விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அணியில் இருக்கும் இளம் வீரர்கள் முதலில் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதோடு கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டால், எதையும் சாதிக்க முடியும்’’ என்றார்.
Loading More post
இந்தியாவை பார்ப்பதற்கு இலங்கையை போலவே உள்ளது - ராகுல் காந்தி எச்சரிக்கை
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்