''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா

''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா
''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா

எதையும் நாம் விளம்பரத்திற்காக பண்ணவேண்டாம் என்றும் எங்கு பேசவேண்டுமோ அங்கு மட்டும் அதை பேசினால் போதும் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்

இன்று சென்னையில் நடைபெற்ற காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “எடுக்கும் முயற்சிகள் தவறலாம். ஆனால் விடாமுயற்சியை தவறவிடக்கூடாது என்பதை மட்டும் எப்போதும் நினைத்துக்கொள்பவன் நான். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன். விளம்பரத்துக்காக இல்லாமல் சமூக பணி செய்யலாம். எதையும் நாம் விளம்பரத்திற்காக பண்ணவேண்டாம். எங்கு பேசவேண்டுமோ அங்கு மட்டும் அதை பேசினால் போதும்” என்று தெரிவித்தார்.

படத்தின் விளம்பரத்துக்காகவே புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இவ்வாறு சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com